விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே தேங்காய் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் வியாபாரி ஜெயமூர்த்தி. மேலும் அவர் வாடிக்கையாளர்களிடம் தேங்காய் பூவின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி வியாபாரம் செய்து வருகிறார்.
அதிகரிக்கும் கோடை வெயில் :
கோடை வெயிலின் தாக்கம் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்சத்து வற்றிவிடும். வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க நீர் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பொதுவாக தென்னை, பனை மரங்களில் அனைத்து பொருட்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை. ஆனால் இவைகளின் பயன்கள் பொதுமக்களுக்கு புரியவில்லை.
தற்போது ஒரு சில மாவட்டங்களில் பனை பூ, குருத்து மற்றும் தேங்காய் பூ, குருத்து பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் மட்டும் விற்பனையாகி வந்த தேங்காய் பூக்கள், பொள்ளாச்சி, சென்னை திருச்சி, நாமக்கல், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் விற்க ஆரம்பித்துள்ளனர். அதுபோல் விழுப்புரத்திலும் ரங்கநாதன் சாலை, மந்தக்கரை, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ஜங்ஷன் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
இதையும் படிங்க : பச்சிளம் பெண் குழந்தை ஏரிக்கரையில் வீசி சென்ற கொடூரம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி
எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது?
தேங்காய் பூ விற்பனை குறித்து வியாபாரி ஜெயமூர்த்தி கூறுகையில், “என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம். முதலில் நான் பாண்டிச்சேரியில் 10 வருடங்களாக தேங்காய் பூ விற்பனையில் ஈடுபட்டு வந்தேன். பாண்டிச்சேரியில் தேங்காய் பூவின் கடைகள் அதிகரிக்க தொடங்கின. இதனையடுத்து நம்ம ஊரிலே தேங்காய் பூ விற்பனை செய்யலாம் என்று நினைத்து தற்போது விழுப்புரத்தில் 4 மாதங்களாக தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறேன். இதற்காக தேங்காய் பூக்களை கேரளா, பொள்ளாச்சி போன்ற போன்ற பகுதியில் இருந்து வர வைக்கிறேன்.
தேங்காய் பூவில் உள்ள நன்மைகள் :
மேலும் பருவகால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம். தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது.
தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது.
ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது. தேங்காய் பூவில் முக்கியமாக முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவிடாது.
சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரக தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம். மேலும் தேங்காய் பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எவ்வளவு லாபம் கிடைக்கிறது?
தேங்காய் பூ ரூ.50, ரூ.80, ரூ.100, ரூ.120 போன்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 தேங்காய் பூ முதல் 150 பூக்கள் விற்பனை செய்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.1500லிருந்து ரூ.2,000 வரை சம்பாதிக்கலாம். இது கோடை காலம் என்பதால் அதிக அளவில் பொதுமக்கள் தேங்காய் பூவை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று வியாபாரி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Health, Lifestyle, Local News, Villupuram