ஹோம் /விழுப்புரம் /

மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரத்தில் கலை திருவிழா ஒத்திவைப்பு 

மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரத்தில் கலை திருவிழா ஒத்திவைப்பு 

மாதிரி படம்

மாதிரி படம்

Villuppuram District News: மாண்டஸ் புயல் காரணமாக மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டி இன்று ரத்து செய்யப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

மாண்டஸ் புயல் காரணமாக மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டி இன்று ரத்து செய்யப்பட்டு, வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கலை திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் 23ம் தேதி வட்டார அளவில் நடத்தி முடிக்கப்பட்ட கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 7ம் தேதி மாவட்ட அளவில் துவங்கியது.

இதையும் படிங்க : மாண்டஸ் புயல் எப்போது கரையைக் கடக்கும்?

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி உட்பட 4 இடங்களில் நடனம், இசை, மொழித்திறன், தோல்கருவி, புல்லாங்குழல், தந்திக்கருவி இசைத்தல், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் வரை இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது.

இன்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. மாண்டஸ் புயல் மழை காரணமாக இன்று நடக்க இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்போட்டிகள், வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை, முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Local News, Vizhupuram, Weather News in Tamil