Home /viluppuram /

சொந்த பணம் ரூ.10.50 லட்சத்தில் கிராமத்துக்கு சிமெண்ட் சாலை.. ஆச்சரியப்படுத்தும் விழுப்புரம் இளைஞர்..

சொந்த பணம் ரூ.10.50 லட்சத்தில் கிராமத்துக்கு சிமெண்ட் சாலை.. ஆச்சரியப்படுத்தும் விழுப்புரம் இளைஞர்..

சொந்த

சொந்த பணத்தில் சந்திரசேகர் அமைத்த சிமெண்ட் சாலை

Villupuram District News | விழுப்புரம் வானூர் அருகே  தான் சொந்த கிராமத்திற்கு சுமார் 10.5 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த இளைஞருக்கு அப்பகுதி மக்கள்  பாராட்டி வருகின்றனர் .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் வானூர் அருகே   சொந்த செலவில் தனது கிராமத்திற்கு சாலை அமைத்து இளைஞர் ஒருவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்..

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் சமுதாய அக்கறை இல்லாமலும், தன் குடும்பம், ஊர் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலரே தான் சார்ந்த பகுதியின் மீதும் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், விழுப்புரம் வானூர் அருகே இளைஞர் ஒருவர் தனது சொந்த செலவில் தன்னுடைய கிராமத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்து கொடுத்த கிராம மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - லட்சுமி தம்பதியர். இவர்களது இளைய மகன் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தின் போது, கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு விதியின் படி சந்திரசேகர் தன் கிராமத்திற்கு வந்து வீட்டில் இருந்தபடியே (work from Home ) தன் அலுவலக பணியினை செய்து வந்தார்.

இளைஞர் சந்திரசேகர்


கிராமத்தில் இருக்கும் போது பெய்த கன மழையினால் தன் கிராமத்து சாலை  சேறும், சகதியுகமாக மாறியிருந்தது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமலும், வயதானவர்கள் வழுக்கி கீழே  விழும் அவலம் ஏற்பட்டது. இதனை கவனித்த சந்திரசேகர் தனது கிராமத்திற்கு சாலை அவசியம் என்பதை உணர்ந்துள்ளார்.

உடனடியாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று தன் கிராமத்தின் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார். இதற்கு போதுமான நிதி இல்லை தற்போது கிடையாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சொந்த பணத்தில் சந்திரசேகர் அமைத்த சிமெண்ட் சாலை


இந்த சாலைக்கு எவ்வளவு செலவு ஆகும் என அரசு அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட சந்திரசேகர், எனது கிராமத்திற்கு சாலை அமைக்கும் அனைத்து செலவையும் நானே செய்துகொள்கிறேன் என முடிவெடுத்து அரசு அலுவலர்களிடம் கூறினார்.

இதனை கேட்ட அரசு அதிகாரிகள்  மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டுமென எடுத்துக் கூறினர். அதன்பின் சந்திரசேகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் அனுமதி பெற்று, அரசு ஒப்புதல் அளித்த படி, சுமார் 14 அடி அகலமும் 270 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலையை சுமார் 10.5 லட்சம் செலவில் தன் சொந்த பணத்தை கொண்டு, கிராமத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்தார்.

ஆச்சரியப்படுத்தும் விழுப்புரம் இளைஞர்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இளைஞரின் இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி