Home /viluppuram /

லாரி மோதி மின்கம்பம் சேதம்.. ரோட்டில் சிதறிய நெல் மூட்டைகள்.!

லாரி மோதி மின்கம்பம் சேதம்.. ரோட்டில் சிதறிய நெல் மூட்டைகள்.!

லாரி

லாரி

Villupuram District: விக்கிரவாண்டி தாலுகா, பூங்குணத்தை சேர்ந்த ஓட்டுனர் சிவா ரிவர்ஸ் எடுக்கும் போது லாரி நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியது.

    விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு கிடங்கிற்கு, ஆனாங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றிவந்து அடுக்கி வைக்கப்படுகின்றது.

    இந்த சேமிப்பு கிடங்கிற்கு, இன்று காலை 7:00 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா, பூங்குணத்தை சேர்ந்த சிவா, (வ 31) என்பவர் லாரியில் தலா 40 கிலோ எடையுள்ள 600 நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார். சேமிப்பு கிடங்கு சென்றபோது, முன்னால் நின்றிருந்த வாகனங்களுக்கு இடைவெளி விடும் வகையில் சிவா, லாரியை ரிவர்ஸ் எடுத்துள்ளார்.

    அப்போது, லாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த முனீஸ்வரன் கோயில் சுற்றுசுவர் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி   கவிழ்ந்தது. இதில், மின் கம்பிகள் அறுந்ததோடு, கோயில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டுனருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை . இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மாற்று லாரியை வரவழைத்து, நெல் மூட்டைகளை ஏற்றி அப்புறப்படுத்தினர்.

    இந்த சேமிப்பு கிடங்கிற்கு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, அமைச்சர் பொன்முடி இன்று காலை 10:00 மணிக்கு ஆய்வு செய்ய வந்தனர். இதனால், துரிதமாக நடவடிக்கை எடுத்து லாரியில் இருந்து கீழே விழுந்த நெல் மூட்டைகளை மற்றொரு லாரியில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டது . அதன்பின் லாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி