விழுப்புரம் அடுத்த மரக்காணம் பகுதியில்,விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக கீத்து கொட்டகையில் தண்ணீர் பந்தலமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல பகுதிகளில் ஆங்காங்கே தன்னார்வலர்கள் சார்பாக தண்ணீர் பந்தல்கள் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் குடிநீர் டேங்க் அகற்றப்பட்டுள்ளது, இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தாகத்தை தணிக்க தேநீர் கடை குளிர்பான கடை ஆகியவற்றை நாடி செல்கின்றனர்.
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் போது முருக்கேரியை தாண்டினால் அதற்கு அடுத்தபடியாக 12 கிலோமீட்டர் தாண்டி மரக்காணத்தில் மட்டுமே கடைகள் உள்ளது. இதற்கு இடைப்பட்ட வழியில் எந்த ஒரு கடையும் இல்லாததால் ,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இது அடுத்து விஜய் மக்கள் இயக்க மரக்காணம் ஒன்றிய தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு,விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் சாலை அருகே நிர்வாகி தினேஷ்குமார் தலைமையில் கீத்து கொட்டகை அமைத்து அதில் மண் பானைகளில் தண்ணீர் வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர், நீர் மோர், குளிர்பானம், எலுமிச்சை சாறு , தர்பூசணி பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
24 மணி நேரமும் இங்குள்ள தண்ணீர் பந்தலில் தண்ணீர், மோர் ஆகியவை இருக்கும் எனவும் இதை வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விஜய் ரசிகர் மன்ற சார்பாக தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vijay fans, Vijay makkal iyakkam, Villupuram, Viluppuram S22p13