முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் கல்லூரி மாணவியர் விடுதியில் காய்கறித் தோட்டம்.. ஆசையாக பராமரிக்கும் மாணவிகள்

விழுப்புரம் கல்லூரி மாணவியர் விடுதியில் காய்கறித் தோட்டம்.. ஆசையாக பராமரிக்கும் மாணவிகள்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram Engineering College | விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவிகள் விடுதியில் 10 சென்ட் இடத்தில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதியில் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 8,000 ரூபாய் மானியத்தில் காயகறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அதை வாஞ்சையுடன் பராமரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் அரசு மானிய உடஹ்வியுட தோட்டம் அமைக்க கோலியனூர் ஒன்றியத்தில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிதேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவிகள் விடுதியில் 10 சென்ட் இடத்தில் அரசு மானியத்தில் தோட்டம் அமைக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள், விடுதியிலுள்ள காலியிடத்தில் உழவு செய்து நாற்றுகளை நட்டனர்.

கோலியனூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், அரசு மானியத்துடன் கூடிய தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி விடுதி காப்பாளர் பெமினா செல்வி, மாணவிகள் பலர் கலந்து கொண்டு மூலிகை செடிகள், தோட்ட பயிர்களுக்கான விதைகளை நட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது செடிகள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு பிறகு நன்றாக வளர்ந்துள்ளது. இந்த  தோட்டத்தில் கத்தரிக்காய், மிளகாய், பிரண்டை, தக்காளி, மூலிகை செடி, மாங்காய், பப்பாளி, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த செடிகளில் உள்ள களையை கல்லூரி மாணவிகள் நீக்கி பராமரித்து வருகின்றனர். காலை மாலை இருவேளையும் சென்று செடிகளுக்கு தண்ணீர் இருக்கிறதா என அன்பாக செடிகளை பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய மாணவிகள், ‘இதுபோன்று தோட்டத்தை அமைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனதிற்கு நிம்மதியாகவும் இருக்கிறது.  இதில் வளர்ந்த காய்கறிகளை நாங்கள் சமைத்து சாப்பிடுவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

First published:

Tags: Local News, Villupuram