முகப்பு /விழுப்புரம் /

தோட்டக்கலை, மாடித்தோட்ட பயிர்களுக்கு மானியங்கள்.. விழுப்புரம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!

தோட்டக்கலை, மாடித்தோட்ட பயிர்களுக்கு மானியங்கள்.. விழுப்புரம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு!

X
மாடித்தோட்ட

மாடித்தோட்ட பயிர்களுக்கு மானியங்கள்

Vilupuram News : விழுப்புரம் மாவட்டத்தில்  நடைபெறும் புத்தகத் திருவிழாவில், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் பொதுமக்களின் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் பொதுமக்களின் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் தோட்டக்கலைத்துறை மற்றும் மலை பயிர் துறை சார்பாக, மாவட்டத்தில் விளையும் பயிர்கள் பற்றி கண்காட்சி, விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தது. இதில் அந்தந்த விவசாயிகள் தோட்டுக்கடை துறை மூலம் பயிர்களை வாங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து பழங்கள், மலர்கள், காய்கறிகள் என விளை பொருட்களை வாங்கி வந்து பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து, இந்தப் பயிர்களை எப்படி சாகுபடி செய்வது, இதற்கு என்னென்ன மானியம் வழங்கப்படுகிறது என்பது போன்ற பல்வேறு தகவல்களை தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க : எட்டுப்பட்டி கிராமங்கள் ஒன்று கூடும் திருவிழா.. திண்டுக்கல்லில் இப்படி ஒரு கோவிலா!

இந்த கண்காட்சியில் மலர் சாகுபடியில் குண்டு மல்லி, சாமந்தி, பன்னீர் ரோஜா, தோட்டக்கலை பயிர் சாகுபடியில் பச்சை மிளகாய், கத்தரி, வெண்டை, அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவையும், பழங்கள் சாகுபடியில், அத்திப்பழம், மாங்காய், முந்திரி பழம் என விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 13 ஒன்றியங்களில் விவசாயிகள் பயிர் செய்கின்றனர்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரியான வெங்கடேசன் கூறுகையில், பல்வேறு ஒன்றியங்களில் பல விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து மகசூல் ஈட்டி வருகின்றனர். அந்தந்த தோட்டக்கலை பயிர்களுக்கும் சிறப்பு மானியங்கள் தரப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    விவசாயிகள் பிரதான பயிரான கரும்பு நெல், மணிலா போன்றவை பயிர் செய்வதை காட்டிலும், மாத வருமானம், நாள் வருமானம் தேவைப்படும் விவசாயிகள் தோட்டுக்கலை பயிர்களை பயிர் செய்து நல்ல லாபம் பார்க்கலாம் என பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.

    First published:

    Tags: Local News, Villupuram