ஹோம் /விழுப்புரம் /

மேடு பள்ளமான சாலைகளால் வழுதரெட்டி பகுதி மக்கள் கடும் அவதி.. பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சாலை அமைக்காததால் அவலம்..

மேடு பள்ளமான சாலைகளால் வழுதரெட்டி பகுதி மக்கள் கடும் அவதி.. பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சாலை அமைக்காததால் அவலம்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News: விழுப்புரம் நகர பகுதியான வழுதரெட்டியிலுள்ள ராம்நகரில் பள்ளங்கள் நிறைந்த, சேரும் சகதியுமான சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் நகரபகுதியான வழுதரெட்டி அருகேயுள்ள 32 வது வார்டில் ஸ்ரீராம் நகர், கௌதம் நகர் , அவ்வை நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் ஸ்ரீராம்நகரில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.

அதன்பின் பாதாள சாக்கடை இணைப்புகளை வீட்டுக்கு வீடு அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரியான முறையில் மூடப்படாத நிலையில் இருப்பதால் பகல் நேரங்களிலேயே வாகனங்கள் செல்வதற்கு திக்குமுக்கு ஆடுகிறது. இரவு நேரத்தில் சொல்லவே முடியாத அளவிற்கு கீழே விழுந்து வார வேண்டிய நிலை உள்ளது.

விழுப்புரம் - வழுதரெட்டி ராம்நகர்

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த பகுதியில் தார் சாலை அமைக்கப்படாததால் சேரும் சகதியுமாக சாலை மாறி இருசக்கர வாகனங்களில் செல்வபர்கள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை சகதியான சாலையில் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விழுப்புரம் - வழுதரெட்டி ராம்நகர்

இந்த பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி நின்றால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும், எனவே பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து தர வேண்டும் எனவும், தற்காலிகமாக தோண்டப்பட்ட மண்ணை சமமாக செய்து கொடுத்தாலே போதும் என பொதுமக்கள் கூறுகின்றனர் .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்பின் ,சாலையை சீரமைத்து தார்சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram