ஹோம் /விழுப்புரம் /

சாலையில் பயணிக்க சேத்துக்குளியல் போடும் விழுப்புரம் மக்கள்..

சாலையில் பயணிக்க சேத்துக்குளியல் போடும் விழுப்புரம் மக்கள்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News | விழுப்புரம்  வழுதரெட்டி காந்திநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டன. அதனை சரியாக மூடாததால் இந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை அமைக்க, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம்  வழுதரெட்டி காந்திநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டன. அதனை சரியாக மூடாததால் இந்த சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

பருவமழை தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் படிக்க:  மதுரை மீனாட்சியம்மனுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த முத்தீஸ்வரர் கோயில்.. அறியப்படாத தகவல்கள்..!

மேலும் பாதாள சாக்கடை அமைக்க பல சாலைகள் தோண்டப்பட்டன. தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக சிமெண்ட் அல்லது தார் கலவை வைத்து மூடாமல் மண் மட்டுமே கொண்டு மூடப்பட்டன. தற்போது பெய்து வரும் கனமழையால், மண் சாலைகள் முழுவதும் சேறும் சகதியும் நிறைந்த சாலைகளாக மாறியது. சாலையில் நடந்து செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வழுக்கி விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மழைநீர் வடிகால்வாய்களும் முறையாக இல்லாததால் சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலைகளை முறையாக மூண்டு போட வேண்டும் மற்றும் மழைநீர், கழிவுநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram