முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் | ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும்- 4 ஆண்டுகளாக வெறும் 10 ரூபாய்க்கு உணவளித்து வரும் வள்ளலார் குழு

விழுப்புரம் | ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டும்- 4 ஆண்டுகளாக வெறும் 10 ரூபாய்க்கு உணவளித்து வரும் வள்ளலார் குழு

X
10

10 ரூபாய்க்கு உணவு

Viluppuram | விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் வள்ளலாரை பின்பற்றும் குழுவினர் எட்டு வருடங்களாக பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் வள்ளலாளரை பின்பற்றும் குழுவினர் எட்டு வருடங்களாக பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளித்து வருகின்றனர். விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து பொதுமக்கள் இங்கு வந்து மனத் திருப்தியுடன் சாப்பிட்டு செல்கிறார்கள்.

விழுப்புரம் அடுத்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்பாக்கம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் முயற்சியால், மக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டது. அதன்மூலம் ஆரம்ப காலத்தில் மக்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்பட்டு வந்தது. முதல் நான்கு வருடம் இலவசமாக உணவளித்து வந்த பிறகு, தற்போது பத்து ரூபாய்க்கு முழு உணவு வழங்கப்பட்டுவருகிறது.

சாப்பிடும் நபர்கள்

இந்த உணவு தயாரிக்கும் குழுவில் ஆறு பெண்கள் வேலை புரிகிறார்கள். இவர்கள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சம்பளம் ஏதும் எதிர்பார்க்காமல் சமைத்து வருகிறார்கள். சம்பளம் இல்லாமல் சமைத்து தரும் பெண்களுக்கு உதவுவதற்காக தற்போது உணவுக்கு பத்து ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 150 பேருக்கு உணவு அளிக்கும் வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் செய்து வருகிறார்கள். இதற்காக ஏழுமலை, அவருக்கு சொந்தமான வயலில் விளைந்த அரிசியை கொடுத்துவருகிறார். காய்கறிகள், மளிகை பொருளை மட்டும் வெளியில் வாங்கிக் கொள்கிறார்கள். பத்து ரூபாய் உணவு அளிப்பது மனதிருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதால் இதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என பெண்கள் கூறுகின்றனர்.

உணவில் கலப்படமா? திருநெல்வேலியில் செயல்படும் நடமாடும் உணவு பரிசோதனை வாகனம்

மேலும் உணவு சாப்பிட வந்த நபர்களும் பத்து ரூபாய்க்கு நல்ல தரத்துடன் ஒரு ஆள் திருத்தியாக சாப்பிடும் அளவிற்கு சாப்பாடு தரப்படுகிறது. வெளியில் ஒரு சாப்பாடு 60, 80 ரூபாய்க்கு சாப்பிட வேண்டியுள்ளது. பத்து ரூபாய்க்கு இங்கு சிறந்த முறையில் உணவு அளித்து வருகிறார்கள் எனக் கூறினர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13