ஹோம் /விழுப்புரம் /

அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! -  விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! -  விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

Villupuram Shooting Spot | விழுப்புரம் மாவட்டம்  வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது பெரம்பை செம்மண் குவாரி. இது விஜயகாந்த், சரத்குமார், விஜய்சேதுபதி, விஷால், சந்தானம், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த பல படங்கள் எடுக்கபட்ட ஷூட்டிங் ஸ்பாட் ஆகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில், வானூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது பெரம்பை செம்மண் குவாரி. இது விழுப்புரத்தில் உள்ள முக்கியமான ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. இங்கே வைகைப்புயல் வடிவேலு நடித்த நகைச்சுவை படத்தின் பல கட்சிகள் உட்பட ஏராளமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த பெரம்பை செம்மண் குவாரியானது விழுப்புரத்தில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கே பழைய திரைப்படங்கள் முதல் தற்போதைய படங்கள் வரை, ஏராளமான சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது பிரபல ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது.

விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

நீண்ட தூரம் பரந்து விரிந்திருக்கிறது இந்த செம்மன் குவாரியில்தான் விஜயகாந்த் நடித்த தென்னவன் படத்தில் வரும் ‘வட்ட வட்ட நிலவு’ பாடலில் சில காட்சிகளை எடுத்திருப்பார்கள்.

சரத்குமார், நிகிதா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சத்ரபதி படத்தில் வரும் ஒரு சண்டை காட்சி இந்த செம்மண் குவாரியில் எடுக்கப்பட்டது.

விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

வின்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்னர் வரும் சண்டை காட்சிகள் இந்த செம்மண் குவாரியில்தான் ஷூட் செய்திருப்பார்கள். அந்த படத்தில் வரும் ஒரு டிரோன் ஷாட்டில் இந்த இடத்தின் அழகை சிறப்பாக எடுத்துக் காட்டியிருப்பார்கள்.

விஷால் நடித்த செல்லமே படத்தில் வரும் ‘ஆரிய உதடுகள் உன்னுது, திராவிட உதடுகள் என்னுது’ பாடல் காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டது. அந்த பாடலலில் இந்த குவாரியை சில கோணங்களில் காட்டியிருப்பார்கள்.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

சந்தானம் நடித்த சக்கபோடு போடுராஜா படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் இந்த செம்மண் குவாரியில்தான் ஷூட் செய்யப்ப்டடன.

விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் வெளியான தென்னாலிராமன் படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் இந்த செம்மண் குவாரியில்தான் எடுக்கப்பட்டது. வீரர்களைப்போல் பொம்மை வைத்து ஏமாற்றவது. மன்னனை விலங்குகளிடம் இருந்து காப்பாற்றுவது என பல காட்சிகளில் இந்த இடத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் பல காட்சிகள் இந்த பெரம்பை செம்மண் குவாரியில்தான் ஷூட் செய்யப்ப்டடது. அந்த படத்தில் வரும் தங்கக் கிணறு காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டிருக்கும். இதேபோல மேலும் பல படங்களின் காட்சிகள் இங்கே எடுக்கபபட்டுள்ளன.

Published by:Suresh V
First published:

Tags: Actor Vijay Sethupathi, Local News, Vadivelu, Villupuram