முகப்பு /விழுப்புரம் /

ஸ்பேனர் பிடிக்கும் பெண் மெக்கானிக்குகள்.. சுயதொழில் பயிற்சி பெறும் விழுப்புரம் பெண்கள்..

ஸ்பேனர் பிடிக்கும் பெண் மெக்கானிக்குகள்.. சுயதொழில் பயிற்சி பெறும் விழுப்புரம் பெண்கள்..

X
விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram News | விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்,  'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக டூவீலர் மெக்கானிக் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர் இரும்பு மங்கைகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

ஆண்களின் கோட்டையாக இருக்கும் மெக்கானிக் தொழிலில் களம் இறங்க தயாராகும் விக்கிரவாண்டியை சேர்ந்த இரும்பு கண்மணிகள்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்,  'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக டூவீலர் மெக்கானிக் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர் இரும்பு மங்கைகள்.

வாழ்ந்து காட்டுபோம் திட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில், படித்த, வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி மூலம் இரு சக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி 20 நாள் நடைபெறுகிறது. இந்த டூவீலர் மெக்கானிக் பயிற்சியில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

இரு சக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி

இதுபோல, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மெக்கானிக் பயிற்சி வகுப்பில் 20 மாணவர்களுடன் மூன்று பெண்களும் சேர்ந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. மெக்கானிக் வேலை ஆண்கள் மட்டும் செய்வதில்லை பெண்களாலும் செய்ய முடியும் என இந்த மூன்று பெண்மணிகள் நிரூபித்து காட்டியுள்ளனர்.

மேலும் இது பற்றி பெண்களிடம் கேட்டபோது பெண்கள் கூறியதாவது,

“ஆண்களால் மட்டும் தான் அனைத்து வேலையும் செய்ய முடியும் என்பது தவறு பெண்களாலும் அனைத்து வேலையும் செய்ய முடியும் என்பதே உண்மை. சிரமமாக இருந்தாலும் நல்ல முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வேலையும் எளிதாக செய்ய முடியும் . அதுமட்டுமல்லாமல் நவீன உலகத்தில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களும் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்டுகின்றனர்.

திடீரென அந்த வண்டியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மற்றவர்களை தேடி ஓடாமல் நாமளே அந்த பிரச்சனை சரி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.வாகனத்தை ஓட்ட தெரிந்த நமக்கு அதை சரி செய்யவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது,பெரும்பாலும் பெண்கள் இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்திகின்றனர். இரவு நேரத்தில் வரும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எளிதில் மெக்கானிக் ஷாப் கிடைக்கும் வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்தேக மெக்கானிக் ஷாப் வைப்பதற்கான முயற்சிகள் நாங்கள் வருங்காலத்தில் ஈடுபடுவோம்” என தன்னம்பிக்கையுடன் கூறினர் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பெண்கள்.

மேலும் இப்பயிற்சிக்கு பின் சான்றிதழும், மற்றும் சுயதொழில் தொடங்க வங்கி மூலம் 30% மானிய கடனும் பெற்றிட ஏற்பாடு செய்யப்படுகிறது. பயிற்சி வகுப்புக்கு முண்டியம்பாக்கம், ஒரத்தூர் , பனையபுரம் , அய்யூர் அகரம் ஆகிய ஊராட்சிகளில் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

First published:

Tags: Local News, Villupuram