Home /viluppuram /

Villupuram News : மேற்கூரை இல்லாத ரயில்நிலைய வாகன நிறுத்தம்.. காசு வாங்குனா போதுமா? பாதுகாப்பு வேணாமா? - பொதுமக்கள் குமுறல்..

Villupuram News : மேற்கூரை இல்லாத ரயில்நிலைய வாகன நிறுத்தம்.. காசு வாங்குனா போதுமா? பாதுகாப்பு வேணாமா? - பொதுமக்கள் குமுறல்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District News : விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேற்கூரையில்லாத வாகன நிறுத்தத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேற்கூரையில்லாத இருசக்கர வாகன நிறுத்தத்தால், திறந்தவெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள், மழை மற்றும் வெயிலில் நின்று வீணாவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது விழுப்புரம் ரயில் நிலையம். சென்னையையும், தென் தமிழகத்தையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் நிலையமாக விழுப்புரம்  உள்ளது. மேலும், தென்னக ரயில்வேயின் 5 முக்கியமான ரயில் நிலையங்களில் விழுப்புரம் ரயில் நிலையமும் ஒன்றாக திகழ்கிறது.

விழுப்புரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த ரயில் நிலையத்தில் இருந்து வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் தினந்தோறும் சென்று வருகின்றனர். இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் பயணிகளுக்காக, ரயில் நிலைய வளாகத்தில், இருசக்கர வாகன கட்டண நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

 

விழுப்புரம் ரயில் நிலையம்


மேற்கூரையில்லாத வாகன நிறுத்தத்தை பற்றி, விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் கூறுகையில்,  “விழுப்புரம் ரயில் நிலைய வாகன நிறுத்தம் மேற்கூரையின்றி திறந்தவெளியில் இருப்பதால், இருசக்கர வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் வீணாகி வருகிறது. மேலும், கடும் வெயிலால் சில இருசக்கர வாகனங்கள் பஞ்சராகும் நிலையும் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச்செல்ல வரும் உரிமையாளர்கள், பஞ்சரான வாகனங்களை எடுத்து செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனர்.

ரயில்நிலைய திறந்தவெளி வாகன நிறுத்தம்


இந்த வாகன நிறுத்தமானது ஒரு புறம் கம்பி வேலியும், மற்றொருபுறம் கம்பியால் ஆன தடுப்பு மட்டுமே உள்ளதால் வாகனங்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. இதே நிலையில் தான் நான்கு சக்கர வாகன நிறுத்தமும் உள்ளது.

ரயில்நிலைய திறந்தவெளி வாகன நிறுத்தம்


எனவே,   வாகன நிறுத்தத்திற்கு மேற்கூரை வசதி ஏற்படுத்தி , வாகனங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ரயில்வே நிர்வாகம், வாகன நிறுத்துவதற்கான கான்ட்ராக்ட் விடும் நபர்களுக்கு சரியான முறையில் மேற்கூரை மற்றும் அடிப்படை வசதி செய்து தந்த பிறகே காண்ட்ராக்ட் விடுமாறு வாகன ஓட்டிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி