முகப்பு /விழுப்புரம் /

கோழிகளுக்கு பரவும் ராணிகட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்..

கோழிகளுக்கு பரவும் ராணிகட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்..

கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Villupuram Chicken Farmers | விழுப்புரம் மாவட்டத்தில் கோழிகளுக்கான இருவார தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சியர்  மோகன்  தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் கோழி வளர்ப்போருக்கு முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகின்றன.

அதுபோலவே இவ்வாண்டும் எதிர்வரும் 01.02.2023 முதல் 14.02.2023 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது. எனவே,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோழிகளை வளர்க்கும் அனைத்து பொதுமக்களும் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதனால் கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயின் காரணமான இறப்பினை தவிர்த்து,கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி விபரம் பெற்று பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Villupuram