ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் ஆலாத்தூரில் பொங்கல் பண்டிகைக்காக தயாராகும் மஞ்சள்..

விழுப்புரம் ஆலாத்தூரில் பொங்கல் பண்டிகைக்காக தயாராகும் மஞ்சள்..

X
விழுப்புரம்

விழுப்புரம் மஞ்சள்

viluppuram Turmeric preparing : விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அருகே ஆலாத்தூர் கிராமத்தில், விவசாயிகள் மஞ்சள் செடிகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பொங்கல் வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அருகே ஆலாத்தூர் கிராமத்தில், விவசாயிகள் மஞ்சள் செடிகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பொங்கல் வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகைளுள் ஒன்று பொங்கல் பண்டிகையாகும் . இப்பண்டிகையில் முக்கிய பொருளாக விளங்குவது கரும்பு மற்றும் மஞ்சள் ஆகும். பொங்கல் பண்டிகையன்று மகிழ்ச்சியுடன் புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பன்னீர் கரும்புகளை வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மஞ்சள் செடிகளும் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இடைநின்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்வி.. அதிரடி உத்தரவு பிறப்பித்த விழுப்புரம் ஆட்சியர்..

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில கிராமத்தில் தான் மஞ்சள் பயிர் விளைவிக்கப்படுகிறது. விழுப்புரத்தில் ஆலாத்தூர், திருக்கனூர், ராதாபுரம், சின்னகல்லிப்பட்டு, மழவந்தாங்கால், சின்னமடம், பூவரசன்குப்பம் போன்ற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் , விவசாயிகள் மஞ்சளை பராமரித்து அறுவடைக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் ஒரு கொத்து மஞ்சள் செடியை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மஞ்சள் கிழங்குகள் தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கலுக்கு எட்டு நாட்கள் முன்னர் மஞ்சள் கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு உள்ளூர் பொது மக்களுக்கும், வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு தரப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி குறைந்த பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் இவை நல்ல விலைக்கு விற்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் அரசாங்கம் அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு எவ்வளவு முக்கியமா அதுபோல மஞ்சள் கொத்து முக்கியமான பொருளாகும் எனவே அரசாங்கம் பொங்கல் தொகுப்போடு மஞ்சளும் சேர்த்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Agriculture, Local News, Pongal 2023, Vizhupuram