ஹோம் /விழுப்புரம் /

பொங்கல் பண்டிகைக்காக விழுப்புரத்தில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

பொங்கல் பண்டிகைக்காக விழுப்புரத்தில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

X
மஞ்சள்

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

Villupuram Turmeric Cultivation | பொங்கல் தொகுப்பில் மஞ்சளையும் தமிழக அரசு சேர்த்து இருந்தால் தங்களுக்கு சிறப்பாக இருந்திருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகைக்காக  விவசாயிகள் மஞ்சள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு முக்கிய பொருளாக விளங்குவது கரும்பு மற்றும் மஞ்சள். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளை கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். இதையொட்டி கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு பன்னீர் கரும்புகளை வியாபாரிகள் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மஞ்சள் செடிகளும் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில கிராமத்தில் தான் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் ஆலாத்தூர், திருக்கனூர், ராதாபுரம், சின்னகல்லிப்பட்டு, மழவந்தாங்கல், சின்ன மடம், பூவரசன்குப்பம் போன்ற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால்  விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய மஞ்சள் விவசாயிகள், மஞ்சள் கிழங்குகள் தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கலுக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மஞ்சள் கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு உள்ளூர் பொது மக்களுக்கும், வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி குறைந்த பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் இவை நல்ல விலைக்கு விற்பனை ஆகும். மஞ்சள் கிழங்குகளும் சென்ற ஆண்டை விட தற்போது நல்ல திடமான முறையில் வளர்ந்துள்ளதால், குறைந்த விலையில் வியாபாரிகள் எடுத்துக் கொண்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. தற்போது ஒரு கொத்து மஞ்சள் செடியை பத்து ரூபாய்க்கு வாங்கிச்செல்வதாக கூறினார்.

மேலும் அரசாங்கம் அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு எவ்வளவு முக்கியமா அதுபோல மஞ்சள் கொத்து முக்கியமான பொருளாகும் எனவே அரசாங்கம் பொங்கல் தொகுப்புடன் மஞ்சளும் சேர்த்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Villupuram