தமிழர்களின் முக்கிய பண்டிகைளுள் ஒன்று பொங்கல். இப்பண்டிகையில் முக்கிய பொருளாக விளங்குவது கரும்பு மற்றும் மஞ்சள் ஆகும். பொங்கல் பண்டிகையன்று மகிழ்ச்சியுடன் புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்பும் வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், பன்னீர் கரும்புகளை வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது.
அதுபோல, விழுப்புரம் ஆலாத்தூர் என்ற கிராமத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நிலத்தில் தண்ணீர் பாய்த்து கொண்டிருக்கின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு முக்கிய பொருட்களில் ஒன்று மஞ்சளாகும்.
இப்படிப்பட்ட பொருட்கள் சில மாவட்டங்களில் ஒரு சில கிராமத்தில் தான் பயிர் செய்ய முடியும்.விழுப்புரத்தில் ஆலாத்தூர், திருக்கனூர், ராதாபுரம், சின்னகல்லிப்பட்டு, மழவந்தாங்கால், சின்னமடம், பூவரசன்குப்பம் போன்ற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் அறுவடை செய்த மஞ்சளை உள்ளூர் பகுதிகளில் ஏற்றுமதி செய்து, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கட்டுடில் குறைந்தபட்சம் 25 மஞ்சள் கொத்து அடங்கிய தொகுப்பாக கட்டப்பட்டு விவசாயிகள் அதனை வண்டியில ஏற்றுமதி செய்கின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal, Villupuram