ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் 14 குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

விழுப்புரத்தில் 14 குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Villupuram District News | விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 14 குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒன்றிய அளவில் சில பள்ளிகளை இணைத்து ‘குறுவள மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த குறுவள மையங்கள் மூலமாக அவ்வப்போது பயிற்சியளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காணை, கண்டமங்கலம், கோலியனூர், மேல்மலையனூர், வானூர், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள், கூட்டேரிப்பட்டு, வல்லம் அரசு உயர்நிலைப்பள்ளிகள், ஓமந்தூர் வி.கே.எம்.வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், திண்டிவனம் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளி, விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய 14 மையங்களில் நடைபெற்ற பயிற்சியில் 2,626 ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மற்ற மையங்களில் நடந்த பயிற்சியை அந்தந்த வட்டார அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Published by:Suresh V
First published:

Tags: Govt School, Local News, Teachers, Villupuram