செவித்திறன் குறைபாடுடைய 6 வயது வரையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை சரிசெய்திடும் வகையில் ஆரம்ப நிலை பயிற்சி மையத்தின் மூலம் வேண்டிய பயிற்சிகள் வழங்கிடும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் தொண்டு நிறுவனத்திற்கு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம், சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் ஆகியவைகளுக்கு ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு அளித்து வருகிறது.
Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு விருப்பமுள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தொண்டு நிறுவன பதிவு சான்றிதழ் மற்றும் தொண்டு நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தொகுப்புகளுடன் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வருகிற 10ஆம் தேதியன்று மாலை 5.45 மணிக்குள் நேரில் சமர்பிக்கலாம் என விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.