விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைப் பகுதி உள்ளது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்கிறது. இதுபோல் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் எடுத்து அவைகளை பாதுகாத்து ஆமைக்குஞ்சுகள் பொறிந்த உடன் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுகின்றனர். அதில் சில ஆமை குஞ்சுகள் இறந்து விடுவதும் நடப்பதுண்டு.
தற்போது ஆமைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் முட்டையிட நேற்று இரவு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு கடல் ஆமை கரைக்கு வந்துள்ளது. இங்கு கரைப் பகுதிக்கு வந்த ஆமை குழி தோண்டி முட்டையிட முயற்சியும் செய்துள்ளது. ஆனால் ஏதோ காரணத்தினால் அந்த ஆமை இறந்துள்ளது. இறந்து கிடந்த ஆமையின் அருகில் முட்டைகளும் சிதறி காணப்பட்டது.
இதனால் கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆமை வரும் வழியில் மீனவர்கள் மீன் பிடிக்கும் பைபர் போட்டில் அடிபட்டு விட்டதா அல்லது கரைக்கு வந்தபோது கடற்கரை ஓரம் சுற்றித்திரியும் நரிகள் அல்லது நாய்கள் அதை கடித்து விட்டதா என்பது ஆமையை உடற்கூறு ஆய்வு செய்யும் போது தான் தெரியவரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடல் ஆமைகள் கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தான் இந்த ஆமை இனங்களை அழியாமல் பாதுகாக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இருப்பினும் இதுபோன்ற சில அசம்பாவிதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து விடுகிறது. எனவே ஆமைகளை பாதுகாக்க மீனவர்கள், சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் கூட்டு முயற்சி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram