ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்.. இந்த சாலையை பயன்படுத்தும்போது கவனம்..முழு விவரம் இங்கே..!

விழுப்புரத்தில் போக்குவரத்து மாற்றம்.. இந்த சாலையை பயன்படுத்தும்போது கவனம்..முழு விவரம் இங்கே..!

போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

Villupuram District | விழுப்புரத்தில் பாலத்தை புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய நெடுஞ்சாலை 45- சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பழுதடைந்த பாலத்தை புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு கோட்டம் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

  முதல் கட்டப்பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த சாலையின் இடது பகுதியில் உள்ள 2-ம் கட்ட பணிகள் செய்யப்படவுள்ளது.

  இதன்காரணமாக திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள், மதுரைவீரன் கோவில் முதல் புதிய பஸ் நிலையம் வரை நெடுஞ்சாலையின் வலது வழியில் ஒரு பகுதியில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியில் உள்ள மற்றொரு பகுதியில் (புதிய பஸ் நிலையம் பக்கம்) மெதுவாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

  இதையும் படிங்க: "பட்டுப்புழு வளர்ப்பில் அதிக மானியத்துடன் அதிக லாபமும் உண்டு” - விழுப்புரம் விவசாயி சொன்ன ரகசியம்?

  பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பணியை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், இதற்கு உரிய ஒத்துழைப்பினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Tamil News, Villupuram