ஹோம் /விழுப்புரம் /

ஆஃபர் அறிவிப்பால் துணிக்கடையில் குவிந்த மக்கள்.. விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆஃபர் அறிவிப்பால் துணிக்கடையில் குவிந்த மக்கள்.. விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

X
விழுப்புரம்

விழுப்புரம்

Viluppuram District News : விழுப்புரத்தில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் மலிவு விலையில் துணிகள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் அதை வாங்க காலை முதலே கடையில் குவிந்த பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வீரவாழியம்மன் கோயில் எதிரே புதிதாக திறக்கப்பட்ட சூப்பர் லைப் என்ற கடையில் 9 ரூபாய் முதல் 599 ரூபாய் விலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வகையான துணி வகைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது.

இதையடுத்து அதை வாங்க காலை முதலே கடையில் குவிந்த பொதுமக்கள் விழுப்புரம் நேருஜி சாலையில் சூப்பர் லைப் என்ற துணிக்கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா சலுகையாக மற்ற கடைகளை காட்டிலும் மலிவு விலையில் துணி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்ததையொட்டி இந்த கடையில் துணிகள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

துணிகளின் ஆரம்ப விலை 9 ரூபாயிலிருந்து 599 ரூபாய் வரை உள்ளது. இதனை அறிந்த விழுப்புரம் நகர மக்கள் அதிகாலையில் நீண்ட வரிசையில் நின்றவாறு துணிகளை வாங்கி சென்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளைஞர்கள் பெண்மணிகள் என அனைவரும் கடையின் வாசலில் குவிந்தனர்.

இதையும் படிங்க : அடேங்கப்பா... ஆச்சரியப்படுத்தும் செஞ்சி கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க

குறைந்த விலையில் துணிகளை வாங்க குவிந்த பொதுமக்களால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இக்கடையில் ஆண்களுக்கு தேவையான ஷர்ட், டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட், குட்டீஸ்க்கு தேவையான ஷர்ட் பேண்ட், பெண்களுக்கு தேவையான குர்த்திஸ், லெக்கின்ஸ், பாவாடை, ஃபிராக் போன்ற அனைத்து விதமான ஆடைகளும் இருந்தது.

விழுப்புரத்தில் இதுபோன்ற கடைகள் இல்லாததால், பொதுமக்களுக்கு ஏற்றவாறு விலை அமைந்திருந்தாலும் காலையிலிருந்து பொதுமக்களின் கூட்டம் கடையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இளைஞர்கள் கை நிறைய அள்ளி சென்று, பில் போட்டு மகிழ்ச்சியாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் வீரவாழி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Local News, Vizhupuram