Home /viluppuram /

பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரத்தில் நெடுஞ்சாலையில் பழுது; போக்குவரத்தில் மாற்றம்

பயணிகள் கவனத்திற்கு... விழுப்புரத்தில் நெடுஞ்சாலையில் பழுது; போக்குவரத்தில் மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதின் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரம் நகரில், திருச்சி நெடுஞ்சாலையில் பழுந்தடைந்த சிறு பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டப்படுகிறது. இதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்தது.

    விழுப்புரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறு பாலம் பழுதடைந்துள்ளது. இதற்கு மாற்றகாக புதிய பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் காவல் துறைகள் இணைந்து நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளன. அதன்படி, ஜானகிபுரம், எல்லீஸ் சத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து சிக்னல் நோக்கிவரும் வாகனங்கள் வீரன் கோயில் சந்திப்பில், எதிா் சாலையில் புதிய பேருந்து நிலையம்
    வரை பயணிக்க வேண்டும்.

    அதேபோன்று, சிக்னலிலிருந்து வீரன் கோயில் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கமாக செல்லும் சாலையில், புதிய பேருந்து நிலையம் முதல் வீரன் கோயில் வரை இடதுபுறம் சற்று குறுகிய பாதையில் செல்ல வேண்டும்.

    இந்தப் போக்குவரத்து மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப பயணிக்கலாம் என்று விழுப்புரம்
    நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி