ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..

விழுப்புரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Villupuram Traffic Diversion | தீபாவளி பண்டிகையை ஒட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்க விழுப்புரத்தின் முக்கிய கடைவீதி பகுதிகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

இம்மாதம் 24ஆம் தேதி (வரும் திங்கட் கிழமை) நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். புத்தாடை வாங்குதல், பண்டிகைக்குத் தேவையான பொருட்களை சேகரித்தல், சொந்த ஊருக்குச் செல்லுதல் என மக்கள் அங்கும் இங்கும் அலைமோதி வருகின்றனர்.

இதனால், முக்கிய கடைவீதிகள் அனைத்தும், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. எனவே, போக்குவரத்து காவலர்கள் வாகன நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் நேக்கில் பல்வேறு ஏற்பாடுகளை ஆங்காங்கே செய்து சிரமம் இன்றி சென்று வர வழிவகை செய்து வருகின்றனர்.

அதன்படி, விழுப்புரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், காந்தி வீதி, கிழக்கு பாண்டி ரோடு, காமராஜர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

இதனால், போக்குவரத்தை சீர்படுத்த, விழுப்புரம் போக்குவரத்து போலீசார் காந்தி வீதி மற்றும் காமராஜர் வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளனர். காந்தி வீதியில் கிழக்கு பாண்டி ரோட்டில் இருந்து காமராஜர் வீதி வரை, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வாகனங்கள் செல்லலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, காமராஜர் வீதியில் பிள்ளையார் கோவிலில் இருந்து பெரியார் சிலை வரை, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, தீபாவளி பண்டிகை வரை அமலில் இருக்கும் என போக்குவரத்து காவல் கண்காப்பபாளர் வசந்த் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Diwali festival, Local News, Traffic, Villupuram