விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் செஞ்சிக்கோட்டையில், செஞ்சிக்கோட்டையின் வரலாறு கூறும் மரபு நடை விழாவை நேற்று (07.01.2023) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் அரசு முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் தொன்மை மற்றும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தினை காத்திடும் வகையிலும், இன்றைய இளைய தலைமுறையினர் பழங்கால வரலாற்றினை அறிந்திட வேண்டும் என்ற வகையில் தமிழகத்தில் உள்ள தொன்மையான கோட்டைகள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், நினைவு மண்டபங்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர தீரச்செயல்கள், பண்டையகால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாரம்பரியங்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரதீரச்செயல்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட பெருமைமிகுந்த செஞ்சிக்கோட்டையின் வரலாறு கூறும் மரபு நடை விழா ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கொண்டாடப்படவுள்ளது.
இதன் மூலம் செஞ்சிக்கோட்டையின் வரலாறு மற்றும் இங்கு ஆட்சிபுரிந்த மன்னர் ராஜாதேசிங்கு போன்றோர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. நாம் ஒவ்வொருவரும் பழங்கால வரலாற்றினை கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எவ்வாறெல்லாம் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!
இதன் மூலம், நாம் நம்முடைய பாரம்பரியம் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதுடன் தொடர்ந்து பாதுகாப்பதற்கும் வழிவகையாக அமைந்திடும். மரபு நடை விழாவின் மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களுக்கும் செஞ்சிக்கோட்டையின் வரலாறு குறித்து தெரியவரும். 7 நாட்கள் நடைபெறும் மரபு நடைவிழாவினை பொதுமக்கள் கட்டணமின்றி பார்த்து பயன்பெறலாம்.
மேலும் தினந்தோறும் மரபு நடை விழாவினை காண வரும் பொதுமக்கள் இங்கு புகைப்படம் எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தால் 14ம் தேதி நடைபெறும் மரபு நடை நிறைவு விழாவில் சிறந்த 100 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு புகைப்படம் எடுத்தவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
செஞ்சிக்கோட்டையினை புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாற்றிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும், முதலமைச்சரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இதுதொடர்பான கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு மேல் நடவடிக்கையில் உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், நிகழ்ச்சியில், செஞ்சிக்கோட்டை விரைவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாறும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்வதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram