ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் பாரம்பரிய அரிசி திருவிழா.. இவ்ளோ விஷயம் இருக்கா..! வியந்து போன பொதுமக்கள்...

விழுப்புரத்தில் பாரம்பரிய அரிசி திருவிழா.. இவ்ளோ விஷயம் இருக்கா..! வியந்து போன பொதுமக்கள்...

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram | விழுப்புரம் நகர பகுதியான கிழக்கு பாண்டி ரோடு, ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்திலுள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ ஜெயசக்தி திருமணம் மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி கண்காட்சி, பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram

விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் தொடங்கியுள்ள இயற்கை அரிசி திருவிழாவில் பாரம்பரிய அரிசி கண்காட்சி, இயற்கை உணவு, நெல் வகை கண்காட்சியை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல், அரிசி, உணவு, விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.

விழுப்புரம் நகர பகுதியான கிழக்கு பாண்டி ரோடு, ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்திலுள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ ஜெயசக்தி திருமணம் மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி கண்காட்சி, பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய அரிசி வகைகளான, கருப்பு கவுனி , மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம் ,கருத்தக்கார், மூங்கில் அரிசி ,குழியடிச்சான்,கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா , கருங்குறுவை கார் அரிசி என பாரம்பரிய காய்கறி விதைகள் , போன்றவை இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது . அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய அரிசி ரகத்தில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:  கலைத்துறையில் ஜொலிக்க வழிபடவேண்டிய கோவில் - விழுப்புரம் சிவலோகநாதர் சிறப்புகள்

இக்கண்காட்சிக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்தும் , சென்னை, சேலம், விருதாச்சலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி கடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு வருகை புரிந்தனர் .

இக்கண்காட்சி முக்கிய நோக்கமே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், இயற்கை விவசாயம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆகும்.  மேலும் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.

மேலும், பாரம்பரிய விதைகளான அவரை, பாகல், மிதி பாகல்,முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, யாழ்பானம்முருங்கை உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட காய்கறி விதைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டு விற்பனைக்கு வைக்கபட்டதை விவசாயிகள் வாங்கி சென்றனர்.

மேலும் படிக்க: தமிழர் கட்டிடக்கலை வரலாற்றில் திருப்புமுனை... மண்டகப்பட்டு கோவில்! - இந்த கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!

பொதுமக்கள்,பாரம்பரிய அரிசி வகைகளை ஒரே இடத்தில் பார்த்து தெரிந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இப்படிப்பட்ட அரிசி வகைகள் இருக்கிறது என்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த கண்காட்சி மூலம் பல்வேறு இயற்கை காய்கறி விதைகளையும், பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய நெல் ரகங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டோம் என பொது மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram