விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த ‘ஓயா உழைப்பின் ஓராண்டு” சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நிறைவு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சி போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்தது.இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம்,காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.
மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் கலை பண்பாட்டுத்துறை மூலம் நாள்தோறும் மாணவர்களின் கிராமிய நடனம் பரதம் நாட்டுப்புற இசை கரகாட்டம் சிலம்பம் மல்லர்கம்பம் போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உணர்த்துகின்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நவீன உலகில் பாரம்பரியம் உணவின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரியயம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களால் தயார் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுத்திருவிழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்திருமதி சித்ரா விஜயன் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil Nadu govt, Villupuram