முகப்பு /விழுப்புரம் /

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Underprivileged Childrens | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் மிசன் வட்சாலயா(Mission Vatsalya) திட்டத்தின் முக்கிய அம்சமான தற்காலிக பராமரிப்பு (Faster Care) செயல்படுத்திட தற்காலிக பராமரிப்புக்கான (Foster Care) வழிகாட்டு நெறிமுறைகள் 2015-ன்படி ஆதரவற்ற குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்கிட வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் தேவைப்படுகிறது.

சொந்த குழந்தைகள் உள்ளோர், தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பு பெற்றோராக குழந்தைகளை வளர்க்கலாம், வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் பெற்றோர்களால் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில்

உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை குறுகிய காலம் அல்லது குழந்தைக்கு 18 வயது முடியும் வரை வளர்ப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும்.

இதையும் படிங்க : ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

மேற்படி, ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய தேவைப்படும் பெற்றோர்கள் விண்ணப்பங்கள் மற்றும் நிபந்தனைகள் நடைமுறைகளை,

top videos

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 04146-290659 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டோ அல்லது dcpuvpm1@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ தொடர்புக்கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Villupuram