முகப்பு /விழுப்புரம் /

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் - இ-சேவை மையம்

விழுப்புரம் - இ-சேவை மையம்

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு ஒனறை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (Mahalir Thittam), மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.

மேலும் படிக்க :  ஆண்டுக்கு 15 நாள் மட்டுமே கிடைக்கும் கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற இந்த உணவை ருசித்திருக்கிறீர்களா?

மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது,

‘அனைவருக்கும் இ-சேவை மையம்’திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :  மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் "அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்https://www.tnesevai.tn.gov.in/ / https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பிங்களை தற்போது முதல் 14.04.2023 நேரம்: 20.00 வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இசேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000/- ஆகும் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000/- ஆகும்.

இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்க்குறிய பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Villupuram