Home /viluppuram /

தி.புதுப்பாளையம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர கோரும் ஊர் மக்கள்..

தி.புதுப்பாளையம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர கோரும் ஊர் மக்கள்..

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram Latest News : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைத்து தருவதுடன், தண்ணீர்   உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி   மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram | Viluppuram
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது . இப்பள்ளி 2010ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது   310 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு இப்பள்ளிக்கு வருகை புரிகிறார்கள் .

இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பள்ளியில் ஓரே ஒரு அடி பம்பு மட்டுமே உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கு என கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள் திறந்த வெளியில்  இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கழிப்பிடம் முழுவதும் உடைந்த நிலையில் உள்ளது.

சுற்றுச்சுவர் இல்லாத தி.புதுப்பாளையம் அரசு பள்ளி


இது தொடர்பாக,  பெற்றோர்கள் கூறியதாவது, “  தி.புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியை சுற்றி முட்புதர்கள் மண்டி உள்ளதாகவும், சுற்றுச்சுவர் இல்லாததால் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும்,  பள்ளி வழியாக ஆடு, மாடுகள், டிராக்டர்கள் செல்வதால் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பதற்கு இடையூறு ஏற்படுகிறது.

விளையாட்டு மைதானம்


இத்துடன், பள்ளியின் விளையாட்டு மைதானம் வெறும் காட்சி பொருளாகவே காணப்படுகிறது.   பள்ளியை சுற்றிலும் காணப்படும் முட்புதர்களால், பெற்றோர்கள் பெரும் பயத்தில் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உடனடியாக இபள்ளிக்கு சுற்று சுவர் எழுப்ப வேண்டும், அப்படியே சுற்று சுவர் கட்டுவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்தாலும் அப்பணியை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, செய்துதரக்கோரியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Villupuram

அடுத்த செய்தி