ஹோம் /Viluppuram /

திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை கோயில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் பரவசம்!!

திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை கோயில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் பரவசம்!!

மங்களாம்பிகை

மங்களாம்பிகை கோவில் குடமுழுக்கு

Villupuram District: விழுப்புரம் அருகே தேவார பாடல் பெற்ற நடுநாட்டு ஆலயங்களில் 14வது ஆலயமான ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை கிருபாபுரீஸ்வரர் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரரை தடுத்தாட்கொண்டு, ‘பித்தா பிறைசூடி’ என பாடப்பெற்ற கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை கிருபாபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு ஆலயங்களில் 14 வது ஆலயமாக கருதப்படுகிறது.

  சிவபெருமான் நஞ்சுண்டபோது அந்த நஞ்சு அவரை தாக்காமல் இருக்க உமயம்மை பசு வெண்னையால் கோட்டை கட்டி பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் தவம் செய்த காரணத்தினால் இத்தலம் திருவெண்ணெய் நல்லூர் என பெயர் பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

  கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.அதனை தொடர்ந்து தீர்த்த சங்கிரஹனம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை , மஹா பூர்ண ஹீதி என சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 4 கால யாக சாலை பூஜைகள் நடைப்பெற்றன.

  விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்றது, மேள தாளங்கள் முழங்க யாக சாலைகளில் இருந்து சிவாச்சாரியர்கள் கலசங்களை கொண்டு வந்து கோயிலில் உள்ள ராஜ கோபுரங்கள், மூலவரான மங்களாம்பிக்கை உடனுறை கிருபாபுரிஸ்வரர் கோபுரம் மற்றும் சுந்தரர், நாயன்மார் கோயில் கோபுரம் மற்றும் மூலவர் க்கும் மேள தாளங்கள் முழங்க , பக்தர்களின் பக்தி கோஷங்கள் இடையே புனித கலச நீர் ஊற்றப்பட்டது.

  பின்னர் புனித கலச நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான சிவனடியார்கள், பக்தி பரவத்தில் சிவ தாண்டவம் ஆடி மகிழ்ந்தனர்.

  இக்கோயில் கும்பாபிஷேகத்தைக் காண, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து புனித கலச நீரை பிரசாதமாக பெற்று சென்றனர் .

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

  Published by:Arun
  First published:

  Tags: Villupuram