விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வருகிற 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
அந்தக்கூட்டத்தில்பேசிய மாவட்ட ஆட்சியர், ”சந்திரமௌலீஸ்வரன் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை 11.12.2022 அன்று நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்பதால் காவல்துறை சார்பில் 08.12.2022 யாகசாலை துவங்கும் நாள் முதல் 11.12.2022 குடமுழுக்கு மற்றும் திருக்கல்யாணம் முடியும் வரை பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகன அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கிட வேண்டும். திருக்கோவில் வளாகம் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு கட்டை அமைத்து கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!
முக்கியமாக கல் குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் குடமுழுக்கு பெருவிழா முடியும் வரை செல்ல அனுமதி வழங்கக்கூடாது. திருக்கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் தகவல் மையம் மற்றும் வழிகாட்டி பலகைகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
தீயணைப்புத்துறை சார்பில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறும் நாட்களில் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருந்திட வேண்டும். யாகசாலை மற்றும் திருக்குளம் அருகில் தீயணைப்பு வாகனம் மற்றும் கூடுதல் தீயணைப்பு பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடமுழுக்கு முடிந்தவுடன் அனைத்து படிசாரத்திலுள்ள சாரங்களை அகற்றி பக்தர்கள் திரும்பவும் ஏறாத வண்ணம் தடுக்க வேண்டும். குடமுழுக்கு முடிந்த பின்னர் தீயணைப்பு வாகனத்தின் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Local News, Tamil News, Villupuram