விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவில் அமைந்துள்ளது அருணாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தின் போது திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரொனா தொற்று இல்லாத காரணத்தால், கோயில் திருவிழா எந்த ஒரு தடையும் இன்றி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கிய திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 5 நாட்களாக அம்மன் பல்வேறு வேடங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் வழங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் அருணாபுரம், ஒட்டம்பட்டு, கண்டாச்சிபுரம், வேட்டவலம் மற்றும் வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் , நினைத்தது நடந்துவிட்டது என்பதற்காகவும் பக்தர்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து தீயில் இறங்கி சாமியை வழிபட்டு சென்றனர்.
இதையும் படிங்க : தஞ்சாவூரில் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெற்ற நபர்.. பறிமுதல் செய்து நடவடிக்கை..!
மேலும் திருவிழாவில் எந்த ஒரு விபரீதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அரகண்டநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram