முகப்பு /விழுப்புரம் /

தனியாக சாலையில் ஓடிய சக்கரம்...விழுப்புரத்தில் விபத்துக்குள்ளான டிராக்டர்

தனியாக சாலையில் ஓடிய சக்கரம்...விழுப்புரத்தில் விபத்துக்குள்ளான டிராக்டர்

X
டிராக்டர்

டிராக்டர் விபத்து

Villupuram Tractor Accident | இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி செல்லும் சாலை நடுவே கரும்புகளை ஏற்றி சென்ற டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள சானிமேடு கிராமத்தில் இருந்து வெட்டப்பட்ட கரும்புகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றது. அப்போது வழியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர் அகரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் சக்கரம் தனியாக கழன்று சாலையில் விழுந்தது.

இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட கரும்புகள் சாலையில் விழுந்து சிதறியது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டு திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் சிதறி கிடந்த கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக செல்ல கூடிய வாகனங்கள், சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால் அய்யூர் அகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதிக அளவில் கரும்பு கட்டுகளை ஏற்றி சென்றதே விபத்திற்கு காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக எடை கொண்ட கரும்பு கட்டுகளை இனி இதுபோல் ஏற்றி வரக்கூடாது என அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்.

First published:

Tags: Local News, Villupuram