விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் வீட்டிலேயே, பொது இடங்களிலோ தீ ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தனியார் பள்ளி மாணவர்கள் மத்தியில் தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காட்டினர்.
இந்தியா முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த வாரம் முழுவதும் தீயணைப்புத் துறை தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் செய்து காட்டி பொது மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதுபோல புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை வீரர்கள் திடீரென வீட்டில் தீ பிடித்தால் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் அந்த தீயை எப்படி அணைப்பது, தீக்காயம் ஏற்பட்டவர்களை எப்படி மீட்டெடுப்பது, தீக்காயம் பட்டால் அவர்களுக்கு முதல் உதவி எப்படி செய்ய வேண்டும் போன்ற பல விழிப்புணர்வுகளை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாணவர்களும் ஆர்வத்துடன் இதனை செய்து பார்த்து பயிற்சி பெற்றனர். இந்நிலையில், விழுப்புரம் மக்கள் அவசர உதவிக்கு 101, 04146222 199, 9445086489 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram