விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் தனியார் கல்லூரி மாணவர்கள் காந்தாரா திரைப்படத்தில் வரும் வராக ரூபம் படலுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடனமாடி அசத்தினர்.
விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள், மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர். திருவிழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி( காட்சி ஊடகவியல்) துறை பயிலும் மாணவர்கள் ”மது இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்தை மையமாக கொண்டு நாடகம் ஒன்றை நடத்தினர். நாடகத்தில் குடித்து குடித்து இறந்து போன கணவனை நினைத்து அழும் கர்ப்பிணி மனைவியை காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி தெய்வம் ரட்சிக்கிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் கர்ப்பிணி பெண் சமூகத்தையும் நீங்கள் காக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க பஞ்சுருளி தெய்வமும் குடியின் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. திரைப்படத்தையே விஞ்சும் அளவிற்கு வராக ரூபம் பாடலுக்கு மாணவர்கள் நடனமாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram