முகப்பு /விழுப்புரம் /

கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு.. விழுப்புரத்தில் ஜோராக நடக்கும் விற்பனை..

கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு.. விழுப்புரத்தில் ஜோராக நடக்கும் விற்பனை..

X
பனை

பனை நுங்கு

Villupuram News | கோடை காலம் தொடங்கிவிட்டாலே   சாலை ஓரங்களில்  ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம்.அந்த வகையில் தற்போது விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்து வருகிறது.

  • Last Updated :
  • Viluppuram, India

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். அப்படியே வந்தாலும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கும், உடல் சூட்டை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பொதுமக்கள் அதிக அளவில் கற்றாழை, பழச்சாறு, மோர், கூழ் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றன. அதேபோல அதிக அளவில் பொதுமக்கள் நுங்கை தேடித்தேடி சென்று வாங்கி சாப்பிடுகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நுங்கு சாப்பிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நுங்கு, விற்பனை அதிகரித்துள்ளது. விழுப்புரம் நகரின் முக்கிய சாலையோரங்களில் நுங்குகளை குவியலாக வைத்து ஏராளமானோர் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பனங்காயில் 3 நுங்குகள் வரை இருக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2 பனங்காய் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கண்கள் கொண்ட காய்கள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அதிக அளவில் நுங்கு விற்பனை காணப்படுகிறது. நுங்குகளை வாங்குவதற்கு பொது மக்கள் அலை மோதிக் கொள்கின்றனர்.

First published:

Tags: Local News, Villupuram