முகப்பு /விழுப்புரம் /

இயந்திர மனிதர்களின் பேரணி: உலக சாதனை படைத்து அசத்திய விழுப்புரம் பள்ளி மாணவர்கள்!!..

இயந்திர மனிதர்களின் பேரணி: உலக சாதனை படைத்து அசத்திய விழுப்புரம் பள்ளி மாணவர்கள்!!..

X
The

The rally of the mechanical men.  students of the school created a world record

Villupuram Robotic World Record | விழுப்புரத்தில் மிக நீண்ட வரிசையில் இயந்திர மனிதர்களின் பேரணியை உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 8 முதல் 14 வயதுடைய 55 மாணவர்கள் சேர்ந்து மிக நீண்ட வரிசையில் இயந்திர மனிதர்களின் பேரணியை உருவாக்கி ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செல்லும் சாலையில்  ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்திலேயே  முதன் முறையாக ரோபோடிக் இன்னோவேட்டி லேப் (Robotic innovativelab)  உருவாக்கியுள்ளனர். இந்த லேப் மூலமாக மாணவர்களுக்கு ட்ரோன்ஸ் (drone's ), 3D printing IOT modelling, Smart - Dustbin, Automatic street light and dismantling the Lilly pot போன்ற பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டும் அல்லாமல் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு, World Record fame Natiyacharya vice chairman திலகவதி முன்னிலையில், ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் (Raaba book of world Record) இடம்பெற 8 முதல் 14 வயது வரையிலான

55 மாணவர்கள் பங்கேற்றனர்.

கிராமத்தில் பிறந்து அமெரிக்கா வரை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கால் பதித்த வில்லேஜ் விஞ்ஞானி பாலாஜி திருநாவுக்கரசு, தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப் வில்லேஜ் டெக்னிக்ஸ் நிறுவனர். இணை நிறுவனர் பாலாஜி வரதன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மிக நீண்ட வரிசையில் இயந்திர மனிதர்களின் பேரணியை (Youngest students to make longest line follower Robot's Rally ) உருவாக்கி, உலக சாதனை படைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து பேசிய பள்ளி மாணவர், உலக அறிவியல் தினத்தில் இது போன்ற ரோபோடிக்ஸ் நிகழ்ச்சி நடைபெறுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் முதன் முறையாக நாங்கள் இந்த உலக சாதனை படைத்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ரோபோட்டிக்ஸ் பற்றி பல விஷயங்களை நாங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து கற்றுக்கொண்டோம் என்று பெருமையாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், பள்ளியின் தாளாளர் பிரகாஷ் பள்ளியின் செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Villupuram