Home /viluppuram /

மூடிக்கிடக்கும் பூங்கா கழிவறை... மக்கள் அவதி.!

மூடிக்கிடக்கும் பூங்கா கழிவறை... மக்கள் அவதி.!

The

The public suffers because the toilet inside the park is not even open

விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்டம் குளம் பூங்கா உள்ளே அமைந்துள்ள கழிவறை திறக்கப்படாத நிலையில் இருப்பதால், பூங்காவிற்கு வருகை புரிய பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

    பூங்காவிற்குள் கழிவறை இருந்தும் திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள குளம் புதர்கள் மண்டி காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைக்க நகராட்சி நூற்றாண்டு நிதியில் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்து சிறப்பாக பூங்கா அமைக்கப்பட்டது.

    இதனையடுத்து,விழுப்புரம் நகராட்சி அம்மா பூந்தோட்டம் குளம் பூங்காவிற்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து பொதுமக்கள் மாலை நேரத்தில் வருகை புரிகின்றனர். சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், இளைஞர்கள் உடல் எடைப் பயிற்சி செய்யும் உபகரணங்கள், பெரியவர்கள் நடைபயிற்சி மேற் கொள்வதற்கான, உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு நாற்காலிகள், போன்ற அனைத்து வசதிகளும் அந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

    மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாட்டு சிரிப்புடனும், பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டும் பூங்கா முழுவதும் பொதுமக்கள் நிறைந்து காணப்படும்.  இப்படி அனைத்து வசதிகளும் நிறைந்த இப்பூங்காவில், பல நாட்களாக கழிவறை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. மேலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் இப்பூங்காவிற்கு வருகை புரிவதால், இயற்கை உபாதையை கழிப்பதற்கான போதிய வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது.

    பூங்காவிற்கு உள்ளே கழிவறை வசதிகள் இருந்தும், பல நாட்களாக அது மூடிய நிலையில் உள்ளது.மேலும் பொதுமக்கள் குடிப்பதற்குப் போதிய தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கைகளை கருத்தில் கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி