முகப்பு /செய்தி /விழுப்புரம் / அன்புஜோதி ஆசிரம விவகாரம் : மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக 5 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு!

அன்புஜோதி ஆசிரம விவகாரம் : மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக 5 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு!

அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு

அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு

ஆசிரமத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி, ஆசிரம பணியாளர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆசிரமத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, அன்பு ஜோதி ஆசிரமத்தினரால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்தொடர்ச்சியாக இன்று தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் ஆசிரமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

First published:

Tags: Human rights Council