மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள் என்று அழைப்படுகின்றன. இந்த முக்கனிகளில் அதிக அளவில் பொதுமக்கள் பயிரிடப்படும் பிரதான பயிராக வாழை உள்ளது. வீட்டிலும், வயல் நிலத்திலும் அதிக அளவில் பொதுமக்கள் வாழை மரங்களை நடுவதை விரும்புவர். வாழை மரங்கள் அதிகளவில் பலன், லாபம் தரக்கூடியவை.
இந்நிலையில், விழுப்புரம் அடுத்த 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நன்னாடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிடுகின்றனர்.
இந்த கிராமத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் பச்சை நிறத்தில் வாழைமரங்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. இங்குள்ள விவசாயிகள் அதிக அளவில் வாழையை தான் பயிரிடுகின்றனர். இப்பகுதி மண்வகை களிமண் மற்றும் வண்டல் மண் ரகமாகும்.
இப்பகுதியில் ரஸ்தாளி, தேன் வாழை, நாட்டு வாழை, கற்பூரவள்ளி ஆகிய ரகங்கள் பயிரிடப்படுகிறது. இந்த ரக வாழைகள் 12 மாதங்களில் காய் வைக்க ஆரம்பிக்கும். அதன்பிறகு அதனை அறுவடை செய்துகொள்ளலாம்.
நல்ல இயற்கை சூழல் அமைந்தால், ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் வாழை இலை சேர்த்து 1 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு ஏக்கருக்கு 1000 செடிகள் நடவு செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் பயிரிடப்படும் வாழை மரங்கள் திருச்சி, வேலூர், கடலூர் போன்ற பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஒரு செடியின் விலை 15 ரூபாய்க்கு எடுத்து வரப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு முதலீடாக ஆள் கூலி , மற்ற வேலைகள் சேர்த்து 80 ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்கிறார்கள். காற்று மழை இருந்தால் மட்டுமே எங்களுக்கு இந்த பயிர் ரகத்தில் நஷ்டம் ஏற்படும்.
இல்லையென்றால் எங்களுக்கு இந்த வாழை மரங்களை பயிரிடுவதில் லாபம்தான் என நன்னாடு விவசாயிகள் கூறுகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.