முகப்பு /விழுப்புரம் /

முந்திரி சாகுபடி பண்றீங்களா? அதிக மானியங்களை வழங்கும் விழுப்புரம் தோட்டக்கலைத்துறை!

முந்திரி சாகுபடி பண்றீங்களா? அதிக மானியங்களை வழங்கும் விழுப்புரம் தோட்டக்கலைத்துறை!

X
விழுப்புரம்

விழுப்புரம் விவசாயி

Viluppuram agriculture | விழுப்புரம் அருகே கல்லப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயிகள் முந்திரி சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டாரத்தை சேர்ந்த கல்லப்பட்டு கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் முந்திரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி மக்கள் மற்ற பயிர்களை காட்டிலும் முந்திரி சாகுபடியை முதன்மையாக கொண்டுள்ளனர்.

அப்படி முந்திரி சாகுபடியில் ஈடுபட்டு வரும் இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி லோக பிரகாசன் கூறுகையில், நான் 15 வருடமாக முந்திரி சாகுபடி செய்து வருகிறேன். என்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் முந்திரி தோப்பு அமைத்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். தோட்டக்கலை துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து எனக்கு தெரிந்தது. அதன் மூலம் முந்திரி சாகுபடியை இரண்டரை ஏக்கரில் செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியமான 18,000 ரூபாயில் ஒட்டுச் செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

அதேபோல மேலும் தேசிய தோட்டுக்கடை இயக்கம் புதிய பரப்பு விரிவாக்கம் திட்ட மூலமாகவும், இரண்டரை ஏக்கர் முந்திரி சாகுபடி ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியத்தில் 12000 ரூபாய் அடிப்படையில் ஒட்டுச் செடிகள் மற்றும் அங்கக இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

மேலும் என்னுடைய பழைய தோப்பை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், பழைய தோப்பு புதுப்பித்தல் என்ற திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கருக்கு மானியத்தில் 25 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள நடவு பொருட்கள் வழங்கப்பட்டது. இத்தனை மானியங்கள் இதில் இருக்கிறது என்பதால் எங்கள் கிராம மக்கள் முந்திரி சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முந்திரி சாகுபடி குறித்து விவசாயி லோகபிரகாசன் கூறுகையில், ”என்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் முந்திரி சாகுபடியை நான் செய்து வருகிறேன். மற்ற பயிர்களை காட்டிலும் முந்திரி சாகுபடி நல்ல லாபம் தருகிறது. எங்கள் கிராமம் மண் அதிக அளவில் செம்மண் கலந்த மண்ணாக இருப்பதால்,முந்திரி சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக விளங்குகிறது. ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

முந்திரியின் ஆயுட்காலம் 25 முதல் 30 வருடம் இருக்கிறது. ஆயுட்காலம் குறைய குறைய முந்திரியின் மகசூல் குறைந்து கொண்டே இருக்கும். மூன்று வருடங்கள் வரை முந்திரி சாகுபடி செய்யலாம். ஒரு வருடத்தில் ஒரு ஏக்கரில் இருந்து பத்து மூட்டை வரை அறுவடை செய்யலாம். ஒரு மூட்டையில் குறைந்தபட்சம் 80 கிலோ வரை இருக்கும். ஒரு மூட்டை குறைந்தபட்சம் 8,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. அதுபோல ஒரு வருடத்திற்கு ஐந்து முறை முந்திரி பழங்களை அறுவடை செய்யப்படுகிறது.

மஞ்சள் நிறத்திலும், அடர் சிவப்பு நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் முந்திரி பழங்கள் காணப்படுகிறது. VRI-3 என்ற ரக முந்திரியில் அதிக அளவில் மகசூல் தருகிறது. அறுவடை செய்யப்படும் முந்திரி கொட்டைகளை இரண்டு நாள் காய வைத்து பிறகு, மூட்டை பிடித்து பண்ருட்டி பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி விடுவோம். நல்ல லாபம் தருவதால் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என லோக பிரகாசன் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Villupuram