முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

X
மாதிரி

மாதிரி படம்

Villupuram Book fair | விழுப்புரத்தில் விமரிசையாக தொடங்கியுள்ளது மாபெரும் புத்தகத் கண்காட்சி. ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில், முதன் முதலாக நடைபெற்ற மாபெரும் புத்தகத் திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் விழுப்புரம் நகராட்சி திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், விழுப்புரம் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை புரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காக மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

விழுப்புரம் புத்தக கண்காட்சி

அதன் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் இந்த முதல் புத்தகத் திருவிழா, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், தொடங்கி வைத்தனர். இந்த புத்தக திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தகத்திருவிழாவில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, உள்ளூர் எழுத்தாளர்களுக்கான புத்தக அரங்கு, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டம் குறித்து ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவுக்கு, பல்வேறு மாவட்டங்களில் சார்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து புத்தகத் திருவிழாவினை கண்டுகளித்து வருகின்றனர்.

top videos

    இந்த புத்தகத் திருவிழாவைஅனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    First published:

    Tags: Local News, Villupuram