முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய ஆட்சியர்

X
மாத்திரை

மாத்திரை வழங்கும் ஆட்சியர்

Viluppuram | விழுப்புரம் மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையினை மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்று வரும் குடற்புழு நீக்க சிறப்பு முகாமில், மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையினை மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.

மாணவிகளின் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பழனி, ‘விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் National Deworming Day) தினத்தினை முன்னிட்டு, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்களிலும், 164 பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 6,80,747 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 165,958 பெண்களுக்கு மொத்தம் 8,46,705 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்ட்சோல்) வழங்கப்படவுள்ளது.

மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 mg கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும் 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 mg கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும் வழங்கப்படும்.

இப்பணியில், பொது சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஊட்டச் சத்துத்துறையைச் சேர்ந்த 3,357 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்றைய தினத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்காமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு முகாம்களில் வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரையினை உட்கொள்வதன் மூலம், தங்கள் உடலில் உள்ள குடற்புழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். இதன் மூலம், நீங்கள் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கப்பெறக்கூடிய முழு ஊட்டச்சத்தும் முழுவதுமாக கிடைக்கப்பெறும். உடல் வலுவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுவதுடன் அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

எனவே, மாணவியர்கள் கட்டாயம் குடற்புழு நீக்க மாத்திரையினை உட்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், அரசு மாதிரிப்பள்ளி மாணவியர்கள் குடற்புழு நீக்கம் தொடர்பான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

First published:

Tags: Local News, Viluppuram S22p13