முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி... ஆபத்தான நிலையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை...

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி... ஆபத்தான நிலையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை...

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி.. 8 பேர் கவலைக்கிடம்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி.. 8 பேர் கவலைக்கிடம்

சிகிச்சை பெற்று வரும் நிலையில்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சந்தித்து விசாரித்தார்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த சுமார் 7 பேர் வீட்டிற்கு சென்ற பிறகு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: இன்று கரையைக் கடக்கிறது 'மோக்கா' புயல் : 190 கி.மீ வரை வேகத்தில் காற்று வீசும்... இந்த பகுதிகளுக்கு ஹை அலெர்ட்!

 இதனிடையே காவல்துறையினர் கிராமப்புறங்களில் நடத்திய விசாரணையில், எக்கியார் குப்பம் கிராமத்தில் மேலும் 4 பேர் மயங்கி கிடந்தது தெரியவந்தது. அவர்கள் காவல்துறையின் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக தற்போது 8 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சந்தித்து விசாரித்தார்.

top videos

    செய்தியாளர்: குணாநிதி

    First published:

    Tags: Local News, Villupuram