முகப்பு /செய்தி /விழுப்புரம் / விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...

விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டோர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டோர்

விஷச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட 42 பேரில் 15 பேருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13 ஆம் தேதி மாலை விஷச் சாராயம் அருந்தி, 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மரக்காணம் போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள், மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: கைகள் இல்லா மாணவன் வரைந்த ஓவியத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்... கைகளை பொருத்த நடவடிக்கை...

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50க்கும் மேற்பட்டோரில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 58 வயதான கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், விழுப்புரத்தில் விஷச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றுவரும் 42 பேரில் 15 பேருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

செய்தியாளர் - குணநிதி, விழுப்புரம்.

First published:

Tags: Crime News, Local News, Villupuram