ஹோம் /Viluppuram /

பாட வாரியாக புத்தகங்கள் பிரித்து வைக்கும் பணியில் ஆசிரியர்கள் மும்முரம்..

பாட வாரியாக புத்தகங்கள் பிரித்து வைக்கும் பணியில் ஆசிரியர்கள் மும்முரம்..

பாட

பாட புத்தகங்களை பிரித்து வைக்கும் பணியில் ஆசிரியர்கள்

Villupuram District: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் , பாடங்கள் வாரியாக புத்தகங்கள் பிரிந்து வைக்கும் பணியில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, நாளை 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றது. இதேபோன்று, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27ம் தேதியும், 2 மாணவர்களுக்கு வரும் 20ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதைெயாட்டி, தலைமை செயலர் இறையன்பு உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடப்பு கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு புத்தகங்களை விநியோகம் செய்யவுள்ளார்.

  இதையடுத்து, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1806 பள்ளிகளிலும் பாடப்புத்தகம் விநியோகிக்கப்பட உள்ளது. அதுபோல விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் , பாடங்கள் வாரியாக புத்தகங்கள் பிரிந்து வைக்கும் பணியில் ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

  Published by:Arun
  First published:

  Tags: Villupuram