Home /viluppuram /

விழுப்புரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம்- 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்

விழுப்புரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம்- 12-ம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் ஆட்சியர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் டி.சி.எஸ் நிறுவனம் பங்கேற்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
    விழுப்புரத்தில் வரும் 25ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பங்கேற்று 3000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்புகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 25ம் தேதி காலை 9மணி முதல் இந்த முகாம் நடக்கிறது. இதில், 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் வேலை தேடுவோர் பங்கேற்கலாம். வயது வரம்பு 18 முதல் 20 -க்குள் இருக்க வேண்டும்.

    முகாமில் தேர்வு செய்யப்படும் வேலை தேடுபவர்களுக்கு 3 மாதகால பயிற்சி, மாத சம்பளமாக ரூ.15,000/-, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இந்நிறுவனத்தால் செய்து தரப்படும். இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது.

    இம்முகாமில் பணியாணை பெறும் எந்தவொரு மனுதாரருக்கும் அவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் வேலைதேடுவோர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்து உள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி