ஹோம் /விழுப்புரம் /

‘டேஸ்ட் டூ டேஸ்ட்’.. டீ மாஸ்டர் முதல் கேசியர் வரை எல்லாமே பெண்கள் தான்.. விழுப்புரத்தில் பிரபலமாகும் டீ கடை

‘டேஸ்ட் டூ டேஸ்ட்’.. டீ மாஸ்டர் முதல் கேசியர் வரை எல்லாமே பெண்கள் தான்.. விழுப்புரத்தில் பிரபலமாகும் டீ கடை

X
டீயை

டீயை ஸ்டைலாக போடும் பெண் டீ மாஸ்டர்

Vilupuram News :விழுப்புரத்தில் T2T ( Taste 2 Taste ) என்ற தேநீர் கடையை பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம், வண்டி மேடு பகுதியில் T2T ( Taste 2 Taste) என்ற தேநீர் கடையை பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். ஆண்கள் மட்டும் டீக்கடை நடத்தும் காலம் மாறி பெண்களும் ஆண்களுக்கு சமம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் இந்த டீக்கடையை வெற்றிகரமாக நடத்தும் இந்த பெண்கள்.

பெண்கள் பல துறைகளில் கால்பதித்து முன்னேறி வருகின்றனர். பெண்கள் கால் தடம் பதிக்காத இடமே இல்லை என கூறுமளவிற்கு பெண்கள் சாதனை வானுலகை தொட்டுள்ளது. லாரி ஓட்டுதல் தொடங்கி ராக்கெட் சையின்ஸ் வரையில் ஆண்களுக்கு சரிசமமாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு டீக்கடையை பெண்கள் மட்டுமே நடத்துகின்றனர். ஆண்கள் மட்டுமே டீ மாஸ்டராக இருந்து வந்த காலத்தை மாற்றி பெண்களும் தற்போது டீ மாஸ்டராக மாறியுள்ளனர்.

விழுப்புரம், வண்டி மேடு பகுதியில் டி டு டி என்ற தேநீர் கடை உள்ளது. இக்கடையின் சிறப்பு என்னவென்றால், டீ போடுவதில் இருந்து ஸ்நாக்ஸ் தயாரிப்பது முழுக்க பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இக்கடை ஆரம்பித்து மூன்று மாதம் ஆகிறது. கடை ஆரம்பித்த நிலைக்கு தற்போது உள்ள நிலை நல்ல முன்னேற்றம் என கடையின் உரிமையாளர் அனுராதா கூறுகிறார்.

மேலும் கடை குறித்து அனுராதா தெரிவிக்கையில், “ நான் பி.எ. எக்கனாமிக்ஸ் படித்து முடித்துள்ளேன். எனக்கு ஒரு மகன். நான் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தேன். ஆனால் போட்டியில் நான் தோல்வி அடைந்தேன். இந்த தோல்வி எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதிலிருந்து வெளியே வருவதற்கு ஏதேனும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என எண்ணினேன்.

நான் மட்டுமில்லாமல் என்னுடன் பல பெண்கள் இணைய வேண்டும் என எண்ணிப் பார்க்கையில், என்னுடைய கணவர் செந்தில்குமார், மாமியார் வாசுகி எனக்கு ஆதரவு அளித்து இந்த தேநீர் கடையை திறப்பதற்கு வழி வகுத்து தந்தனர்.என்னுடன் சேர்ந்து கடையை நடத்துவதற்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் துணையுடன் இந்த கடையை நடத்துகிறேன் .

Also Read: திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!

கடை காலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டு மணி வரை செயல்பட்டு வருகிறது. மற்ற கடைகளை விட இக்கடையில் சிறப்பு என்னவென்றால் இக்கடையில் நுரையீரலை பாதிக்கும் புகை பிடிப்பதற்கு இங்கு நோ, பாரம்பரிய உணவு வகைகள் கொண்ட ஸ்நாக்ஸ் என்று பல உண்டு.முதலில் ஆரம்பித்ததற்கு தற்போது நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. பெண்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி கிடக்காமல் ஏதேனும் ஒரு சுயதொழில் செய்து சாதிக்க வேண்டும். அது எந்த தொழிலாக இருந்தாலும் அதில் உங்களுடைய திறமையை காட்ட வேண்டும்.எனக்கு இந்த தேநீர் கடையை இன்னும் பெரிய அளவிற்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கிறேன் விரைவில் அதுவும் நடக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறி வந்த வாடிக்கையாளரை கவனிக்க சென்றுவிட்டார்.

First published:

Tags: Local News, Tamil News, Villupuram