Home /viluppuram /

சுதந்திர தினத்தன்று விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு

சுதந்திர தினத்தன்று விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின்படி சுதந்திர தினத்தன்று அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று அன்றைய தினத்தில் கடையை திறந்து விற்பனை செய்ய கூடாது என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15ம் தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரு நாள் மூடப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி